Workshop

STEP-UP - WEDDING PORTRAITURE AND OUTDOOR SHOOT WORKSHOP by Karthik Rajagopal

சென்னை, 04 ஆகஸ்ட் 2019 ஆம் தேதி TRN ஸ்டுடியோவில் “ஸ்டெப்அப்” என்ற திருமண புகைப்படம் எடுத்தல் மற்றும் லைட்டிங் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது . திருமண புகைப்படக் கலைஞர்களான திரு. கிரண் குமார் (@03rdeyestudios), திரு. ராஜ்குமார் (@clickbugsphotography) மற்றும் திரு. கார்த்திக் ராஜகோபால் (@tryanglephotography ) இந்த பட்டறையை நடத்தினர்.

இந்த பட்டறைக்கு உலகின் முன்னணி புகைப்பட ஒளி பிராண்டான Profoto மற்றும் சிருஷ்டி டிஜி லைப் (Event Sponsor), Lighting ஆதரவு அளித்தனர். சோனி இந்தியாவும், திரு. ரஞ்சித் குமார் (ADNT ரத்னா) அவர்களும் எங்களுக்கு  ஆதரவு அளித்து சிறப்பித்தனர். தொழில்முறை மாடல்களான சந்தியா, பிரியா மற்றும் ராக்கி பட்டறைக்கு வந்த பங்கேற்பாளர்களுக்கு மணமக்களாக போஸ் கொடுத்தனர். மாடல்களுக்கான அலங்காரம், பிங்கி (@pinkyvismaya) மற்றும் அனுராதா கிரண் (@agam.artistry) போன்ற பிரபல ஒப்பனை கலைஞர்களால் செய்யப்பட்டது. மேடை அலங்காரம் வெட்டிங் சக்ராவால் செய்யப்பட்டது.

பல புகைப்பட பட்டறைகள், அடிப்படை முதல் முன்னேற்ற நிலை வரை நடத்தப்பட்டாலும், இறுக்கமான சூழ்நிலைகளிலும் குறுகிய நேரத்திலும் செயல்படும் திருமண புகைப்படக்காரர்களின் லைட்டிங் தேவைகளை நிவர்த்தி செய்ய ஒரு லைட்டிங் பட்டறையை நடத்தவேண்டும் என்று நினைத்தோம். எனவே ஒரு திருமண புகைப்படக் கலைஞரின் லைட்டிங் மற்றும் உருவப்படத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான படிநிலைகளை நாங்கள் நிர்வகித்தோம்.

இந்த பட்டறை, லைட்டிங் குறித்த தொழில்நுட்ப வகுப்புடன் கார்த்திக் ராஜகோபால் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. லைட்டிங் முறைகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது  HSS போன்ற நுட்பங்களைப் எவ்வாறு திருமணங்களில் பயன்படுத்துவது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடந்து கிரண் குமார் ஒரு சிறிய இடைவெளியில் 15 சிறந்த மணமகள் புகைப்பட தொகுப்பை எவ்வாறு ஷூட்  செய்வது என்று செயல் முறை விளக்கம் அளித்தார். பங்கேற்பாளர்களும் ஷூட் செய்தார்கள். ஒருங்கிணைப்பாளர்கள் உடனுக்குடன் பங்கேற்பாளராகளுக்கு feedback அளித்தனர். இதைத் தொடர்ந்து ராஜ் குமார் ஒரு விரிவான திருமண தொகுப்பில் 3 புள்ளி விளக்குகளைப் ( 3 point லைட்டிங்) பயன்படுத்தி மணமகளின் உருவப்படத்தை எவ்வாறு ஷூட்  செய்யவது என்று தொழில்முறை விளக்கம் அளித்தார். Profoto B10, B10 plus , B1X என்று தொழில்முறையில் சிறந்த லைட்டுகள் பயன்படுத்தப்பட்டது. 

மதிய உணவுக்குப் பிறகு, பி.வி.சுப்பிரமணியன் (நிறுவனர் - www.kitkarma.com மற்றும்  Profoto & Ilford mentor), கார்த்திக் யாதவ் (Yadhu Photography) மற்றும் ஸ்ரீராம் ரகு (Signatures) ஆகிய தொழில்முறை நிபுணர்கள் திருமண புகைப்பட எடுத்தல் பற்றி அவர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

மாலை 4 மணிக்கு நாங்கள் அனைவரும் வெளிப்புற படப்பிடிப்புக்காக அருகிலுள்ள தனியார் கடற்கரைக்கு சென்றோம். திருமணத் தம்பதிகளுக்கு எல்லையற்ற பிரதிபலிப்பு (Infinite Reflection ) காட்சிகளை உருவாக்கும் முறையை கண்ணாடியைப் பயன்படுத்தி தொழில்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மழை பெய்தாலும், பங்கேற்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் அமைப்பாளர்கள் உற்சாகம் குறையாமல்  பங்கேற்றனர். மேலும் ஸ்டுடியோவுக்கு திரும்புவதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. மழை தணிந்தபோது, இயற்கை அன்னை வானவில்லோடு ஆசீர்வதித்தார். அனைத்து பங்கேற்பாளர்களும் HSS பயன்முறையில் Profoto பி10 பிளஸின் சக்தியை பயன்படுத்தி படம் எடுத்தார்கள்.

பட்டறையின் போது, பங்கேற்பாளர்கள் பல்வேறு தொழில்முறை மாற்றிகளுடன் ( Lighting Modifiers ) A1, B10, B10 + மற்றும் B1X போன்ற Profoto விளக்குகளைப் பயன்படுத்தினர் . Profoto விளக்குகள் எவ்வளவு நம்பகமானவை என்பதையும், அதிக வேகத்தில் தொடர்ந்து படமெடுக்கும் போது கூட இந்த விளக்குகள் ஆற்றல் மற்றும் வண்ண வெப்பநிலையின் மாறுபாடு இல்லாமல் ஒளியை எவ்வாறு வீசுகின்றன என்பதையும் நாங்கள் பிரதிபலித்தோம்.

DSC07474-2.jpg

பட்டறையின் போது பல்வேறு வேலைகளுக்கு எங்களை ஆதரித்த முகேஷ், இஸ்மாயில் மற்றும் யஷ் ஆகியோருக்கும், பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் ஸ்பான்சர்களுக்கும் எங்களது  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Step-Up - Wedding Portraiture and Outdoor Shoot Workshop by Karthik Rajagopal

“Step-Up” a wedding photography portraiture & lighting workshop named was conducted in Chennai on 04th August 2019 at TRN Studio. This workshop was organized by three wedding photographers Mr. Kiran Kumar ( @03rdeyestudios ), Mr. Rajkumar Jeevaraj ( @clickbugsphotography) & Mr. Karthik Rajagopal ( @tryanglephotography) along with Mr. Ranjith of ADNT Rathna for gear support. The workshop was sponsored by Profoto, a leading photography light brand in the world, Srishti Digi Life and supported by Sony India. We had professional models Sandhya, Priya and Rocky who were decorated by eminent makeup artists like Pinky (@pinkyvismaya) and Anuradha Kiran (@agam.artistry). Stage decorations were done by Wedding Chakra.

While many photography workshops are conducted from basic to advance level, we could not find a lighting workshop which  addresses the lighting needs of wedding photographers who operate in tight situations and time. Hence we curated Step-up to address the lighting and portraiture needs of a wedding photographer. 

The session started with a technical session from Karthik Rajagopal on lighting with live demonstration of types of lighting, methods and its effects. This was continued by Kiran who demonstrated the workflow to shoot a set of 15 best bridal shots within a span of 15 minutes with speedlights using techniques like HSS and value adding lighting props in a wedding scenario. This was followed by Raj who demonstrated bridal shoot using 2 point lighting in an elaborate wedding set.

After lunch, we had expert talks from PV Subramanian (Founder - www.kitkarma.com, Profoto & Ilford mentor), Karthik Yadhav (Yadhu Photography) and Sriram Raghu (Signatures) to share their experiences and business insights with our participants.

At 4 pm we all moved to a nearby private beach for outdoor couple shoot. We used mirrors and showed participants on ways to compose infinite reflection shots for pre-wedding couples. Although it was raining, both the participants, sponsors and organizers were enthusiastic and did not show any signs of returning to the studio. When the rain subsided, mother nature blessed our workshop participants with rainbow as a prop. All participants explored the power of Profoto B10 Plus in HSS mode.

During the course of the workshop, participants were able to use Profoto lights like A1, B10, B10+ and B1X with a variety of professional modifiers. We also demonstrated how reliable Profoto lights were and how these lights throw light without variation of energy and colour temperature even while shooting continuously at high speed.

We thank Mukesh, Ismail and Yash for supporting us with various activities during the workshop.

DSC07474-2.jpg